Movie News · Uncategorized

எமன் – திரைவிமர்சனம்

c5bb30fwaaahesn

லைக்கா புரடக்ஷன்ஸ் & விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க, ஜீவா சங்கர் எழுத்து, இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில், விஜய் ஆண்டனியின் அதிரடி இசையிலும், நடிப்பிலும் வந்திருக்கும் திரைப்படமான “எமன்”.

அதிரடி ஆக்ஷன் படமென்றாலும் அதில் விஜய் – மியா இடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொயடிக்கான காதல் காட்சிகள் பெரிதாக கவனம் ஈர்ப்பது பெரும் பலம். விஜய் ஆண்டனியுடன் மியா ஜார்ஜ், ‘மம்பட்டியான்’ தியாகரா ஜன், சில்பா மஞ்சுநாத், சங்கிலி முருகன், சார்லி சுவாமிநாதன், இயக்குனர் மாரிமுத்து, ஜெயக்குமார், கிரண், அர்ஜித்… உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது கூடுதல் பலம்.

இரண்டரை மணி நேரம் தன், அப்பாவிற்காக அவருக்குப்பின் பிள்ளை நடத்தும் அரசியல் பழிவாங்கலை கருவாகவும் கதைக்களமாக கொண்டு ஆக்ஷன் அதிரடியாக வந்திருக்கிறது விஜய் ஆண்டனியின் “எமன்”.

கதைப்படி அப்பா விஜய் ஆண்டனி, ஜாதி மற்றும் அரசியல் பழிக்கு பழியால் தான் சார்ந்திருக்கும் கட்சி சார்பில் எம்எல்ஏ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், தீர்த்து கட்டப்படுகிறார். சந்தர்ப்பவசத்தால் சில பல வருடங்கள் கழித்து, அவரது புத்திரர் விஜய் ஆண்டனி, புதிதாக அரசியலுக்கு வந்து நேர்மையுடனும், தைரியத்துடனும் செயல்படுகிறார்.

விஜய் ஆண்டனியின் வளர்ச்சியை அவருக்கு உதவுவது போல் தடுக்க நினைக்கிறார். நீண்ட காலமாக அரசியல் செய்து வரும் ‘மம்பட்டியான்’ தியாகராஜன், நேரடியாக எதிர்க்காமல் கூடவே இருந்து கவிழ்க்க திட்டங்களைத் தீட்டுகிறார் தியாகராஜன். அவரின் சதிகளை விஜய் ஆண்டனி முறியடிக்கிறாரா? இல்லையா என்பதே “எமன்” படத்தின் கதை மொத்தமும்.

அறிவுடைய நம்பியாக அப்பா கேரக்டரில் சில நிமிடங்களும், மகன் தமிழரசனாக படம் முழுக்கவும் இரண்டு “கெட்-அப்”புகளில் வரும் விஜய் ஆண்டனி, தனது, முந்தைய படங்களைக் காட்டிலும் நல்மெருகேற்றி நடித்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

“இந்த உயிர் பயம் காட்டறதுலாம் வேற எவன் கிட்டயாவது வச்சிக்க… எல்லாத்துக்கும் துணிந்து தான்டா உள்ள வந்திருக்கேன்…. எனும் போது சிலிர்க்க வைக்கிறார் விஜய் ஆண்டனி.

அது மாதிரி அடுத்தடுத்து சிறையில் காலாலேயே செல்வத்தின் கழுத்தை முறிக்கும் காட்சியில் ஆக்ஷனிலும், மியா ஜார்ஜுடனான காதல் காட்சிகளிலும் தமிழ் அரசன் – விஜய் ஆண்டனி, செமயாய் மாஸ்காட்டியிருக்கிறார்.

இப்படக் கதாநாயகி : அஞ்சனாவாக, இப்படத்திலும், நடிகையாகவே அழகாக வந்து அசத்தியிருக்கிறார் மியா ஜார்ஜ். வாவ்!

போதை பொருள் கடத்தல் முதல் ஆள் கடத்தல், தீர்த்து கட்டல் வரை எல்லாம் செய்யும் அரசியல்வாதியாக, வில்லனாக வாழ்ந்திருக்கிறார் ‘மம்பட்டியான்’ தியாகராஜன், அரசியல் டானாக அவரது நடை, உடை பாவனைகள் மிரட்டல், சில இடங்களில் எமனையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார் இந்த மாஜி ‘மம்பட்டியான்.’

அப்பா அறிவுடை நம்பி விஜய்யின் மனைவி அகல்யாவாக கொஞ்ச நேரமே வரும் சில்பா மஞ்சுநாத் அமைச்சர் தங்க பாண்டியாக வரும் அருள் டி.சங்கர் இவரைப் போன்றே, தமிழரசனின் தாத்தாவாக வரும் சங்கிலி முருகன், மணிமாறன் – மாரிமுத்து, செல்வரத்தினம் – ஜெயக்குமார், அமைச்சரது பிஏ.தியாகு வாக – சார்லி, கோவிந்தன் – சுவாமிநாதன், அன்பழகன் – கிரண், சக்தியாக அர்ஜித் ஆகிய அனைவரும் கச்சிதம்.

தொழில்நுட்பகலைஞர்களில், திலீப் சுப்பராயனின் அதிரடி ஆக்ஷன், செந்தில்ராஜின் பக்கா, படத்தொகுப்பு. இயக்குனர் ஜீவா சங்கரின் ஒவியப்பதிவு, ஒளிப்பதிவு உள்ளிட்டவை படத்திற்கு பெரிய ப்ளஸ்.

விஜய் ஆண்டனியின் இசையில், “மீலோடு மீலோ…”, “நீ எம் மேல கை வச்சா காலி…”, “கடவுள் எழுதும் கவிதை…. “உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் கூடுதல் பலம்.

இயக்கம் ஜீவா சங்கரின் எழுத்து, இயக்கத்தில. “எமன்” எனும் டைட்டிலும் தமிழ் அரசன் – விஜய் ஆண்டனியின் “எமன்” எனும் பட்டப்பெயர்க்கான காரணமும் படத்திற்கு பெரும் பலம். “தப்பு செய்யறதுக்கும் தப்பு செஞ்சவனை தண்டிக்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு…”,

“வாழ்க்கையில நாம எடுக்கிற முடிவுகளுக்கான பலனை நாம அனுபவச்சி தான் ஆகணும்…..”, என்பது உள்ளிட்ட “பன்ச்” டயலாக்குகளையும் பகட்டான காட்சிப்படுத்தல்களையும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால், “எமன் ” – நிச்சயம் “எம்பெருமானாகத் தெரிவான்!”

ஆகமொத்தத்தில் “எமன்’ – ‘எமகாதகன்!”

Source By: KalakalCinema

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s